‘ஒரே ஒரு நாள் நிம்மதியாக இருந்துக்கோ…’ ரஜினியை எச்சரிக்கும் பிரபலம்..!


‘ஒரே ஒரு நாள் நிம்மதியாக இருந்துக்கோ…’ ரஜினியை எச்சரிக்கும் பிரபலம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் இதன் டப்பிங் பணிகளுக்காக தைவான் நடிகர் வின்ஸ்டன் சவோ சென்னை வந்திருந்தார். தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசி சென்றார் அவர்.

அதில் ஒன்று அவர் பேசிய வசனம் ரஜினியை மிரட்டுவதாக அமைந்துள்ளதாம்.

அதாவது… “ஒரே ஒரு நாள் விடுறேன். உன் குடும்பத்தோட ஜாலியா நிம்மதியா இருந்துக்கோ…” என்று எச்சரிப்பதாக உள்ளது.

பாவம் அவர் ரஜினியின் பவர் தெரியாமல் வந்தார் பேசிட்டு போயிட்டார். இக்காட்சி திரையில் வரும்போது எத்தனை ரசிகர்களின் சாபத்தை வாங்கிக் கொள்ளப் போகிறாரோ…