‘ஓட்டுக்கு பணம் வாங்கினா திருடன்தான் உன் தலைவன்…’ கமல் சூடான பேச்சு…!


‘ஓட்டுக்கு பணம் வாங்கினா திருடன்தான் உன் தலைவன்…’ கமல் சூடான பேச்சு…!

டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார் கமல்.

இவருடன் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல். அப்போது அவரிடம் சட்டமன்ற தேர்தல் குறித்து கேட்கப்பட்டது.

“எல்லாரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். என் ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு வாக்களிக்கலாம்.

நான் தேர்தல் சமயத்தில், படப்பிடிப்புகாக லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லவிருப்பதால் வாக்களிக்க முடியாது. நான் இல்லையென்றாலும், எனது ஓட்டை எவராவது போட்டு விடுவார்.

மேலும் கடந்த முறை, என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை” என்றார்.

அப்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்தும் கேட்கப்பட்டது.

“பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போட்டால், நீங்கள் உங்கள் எம்.எல்.ஏ.வை கேட்கும் தகுதியை இழக்கிறீர்கள். உங்களுக்கு கேள்வி கேட்கும் அறுகதை இல்லை.

நீ பணம் வாங்கினால், ஒரு திருடன்தான் உங்களுக்கு தலைவனாக வருவான். எனவே உங்கள் உரிமையை விற்காதீர்கள்” என்றார்.