இந்தி இயக்குனர் சாஜித்கானுடன் தமன்னா காதல்.?


இந்தி இயக்குனர் சாஜித்கானுடன் தமன்னா காதல்.?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, தற்போது இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

பாலிவுட் இயகுனர் சாஜித்கான் இயக்கிய ஹிம்மத்வாலா மற்றும் ஹம்சகல்ஸ் என்ற இருபடங்களிலும் தமன்னாதான் நாயகி.

எனவே, இந்த இயக்குனருக்கும் தமன்னாவுக்கும் இடையே காதல் என்று திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இதுக்குறித்து தமன்னா கூறியதாவது… ‘நான் யார் மீதும் காதல் கொள்ளவில்லை. தற்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணமும் எனக்கு இல்லை’ என்றார்.

இதற்கு முன்னே, கார்த்தி மற்றும் நாக சைதன்யா ஆகியோருடனும் காதலில் கிசுகிசுக்கப்பட்டவர் தமன்னா என்பது நாம் அறிந்ததே. தற்போது ‘தோழா’ படத்தில் கார்த்தியுடன் ஜோடியாக நடித்து வருகிறார் தமன்னா.