ஸ்ருதி இல்லனா தமன்னா; அதாண்டா ‘கொம்பன்’ கார்த்தி!


ஸ்ருதி இல்லனா தமன்னா; அதாண்டா ‘கொம்பன்’ கார்த்தி!

பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க நடிகர்கள் நாகார்ஜுனா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் நடிப்பதாக இருந்தது.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘அச்சமில்லை’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதால் இப்படத்தின் இடையில் இருந்து விலகியதாக தெரிகிறது. கால்ஷீட் இல்லை எனவும் தற்போது நடிக்க முடியாது என தெரிவித்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ருதிஹாசன் மீது வழக்கு தொடர்ந்தார்.

இதனைக் ஏற்றுக்கொண்ட ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட் அதிரடி தடை விதித்தது. “இனி ஸ்ருதிஹாசன் ஒப்புக்கொண்டபடி படத்தை முடித்துக் கொடுப்பதற்கு முன் புதிய படங்களை ஒப்புக்கொள்ளக்கூடாது என ஒரு தீர்ப்பை வழங்கியது. இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.

தற்போது ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கார்த்தி ஜோடியாக ‘பையா’, ‘சிறுத்தை’ போன்ற படங்களில் தமன்னா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஸ்ருதி இல்லனா தமன்னா’ என்று களம் காண தயாராகிவிட்டார் இந்த கொம்பன்.