ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’ படத்தில் தமன்னா?


ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’ படத்தில் தமன்னா?

தனது நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இதனையடுத்து கெட்ட பயடா இந்த கார்த்திஎன்ற படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இதில் ஜிவி. பிரகாஷ் உடன் எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுத, வசனங்களை அட்லி எழுதுகிறார். சங்கர் குணா இப்படத்தை இயக்குகின்றனர்.

இதனைத் தொடர்ந்து டார்லிங்படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.  இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படங்களை தொடர்ந்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் ‘புரூஸ் லீ’  படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலில் ஆட தமன்னாவை அணுகியதாக தெரிகிறது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் தமன்னா. இதுபற்றி அவருடைய நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது…

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புரூஸ் லீபடத்தில் தமன்னா நடனம் ஆடவில்லை, இது தொடர்பாக யாரும் அவரை அணுகவும் இல்லை என்றனர்.