குடித்து விட்டு உளறி சென்ற ‘உத்தம வில்லன்’ ஊர்வசி!


குடித்து விட்டு உளறி சென்ற ‘உத்தம வில்லன்’ ஊர்வசி!

பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தில் தொடங்கி இன்று வரை தன் கதாபாத்திரங்களில் தனி முத்திரையை பதித்து வருபவர் ஊர்வசி. நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்களில் இன்றும் தென்னிந்திய திரையுலகை தன் பக்கம் கவர்ந்து வைத்துள்ளவர் இவர்.

தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவுள்ள ‘உத்தம வில்லன்’ படத்திலும் இவரது நடிப்பு தொடர்ந்து வருகிறது. கமலின் மனைவியாக ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கேரள சட்டசபை அருகே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். ஒரு முக்கிய பிரமுகரை சந்திக்க வந்துள்ளதாகவும் தெரிகிறது. அந்த நபர் வெளியே சென்றுவிட்டதால் தெருவில் நின்று தகராறு செய்துள்ளார். அங்கிருந்த செக்யூரிட்டி அவரிடம் மேடம் ‘அலுவலகம் நேரம் முடிந்துவிட்டது. அதனால் அந்த நபர் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்’.  அதற்கு பதிலளித்த ஊர்வசி மலையாளத்தில் அந்த முக்கிய நபரை திட்டியுள்ளார். அவர் வரசொல்லிதானே நான் வந்தேன். அவருக்கு மட்டும்தான் வேலையிருக்கா? எங்களுக்கில்லையா? என்று கேட்டுள்ளார். அப்போது அவர் சிறிதளவு மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. பேசும் வார்த்தைகளில் நிதானம் இல்லாமல் தடுமாற்றம் தெரிகிறது.

இந்த தகராறை அங்கிருந்த ஒரு நபர் வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது கேரளாவில் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.