முஸ்லிம் இயக்குனரை திருமணம் செய்த விஜயலட்சுமி!


முஸ்லிம் இயக்குனரை திருமணம் செய்த விஜயலட்சுமி!

‘சென்னை 28′ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இப்படத்தினை தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘கற்றது களவு’, ‘வனயுத்தம்’, ‘வெண்ணிலா வீடு’, ‘பிரியாணி’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் ‘காதல் கோட்டை’ இயக்குனர் அகத்தியனின் இரண்டாவது மகள் என்பது தாங்கள் அறிந்ததே.

இதனிடையில் ‘வல்லினம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பெரோஸ் முகம்மது என்பவருடன் காதல் கொண்டார் விஜயலட்சுமி. தற்போது கிருஷ்ணா – ஆனந்தி நடிக்கும் ‘பண்டிகை’ படத்தை இயக்கி வருகிறார் பெரோஸ். இப்படத்தை தயாரித்து வருகிறார் விஜயலட்சுமி.

இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்று இந்து முறைப்படி நடைபெற்றது. இவர்கள் இருவரும் வெவ்வெறு மதத்தை சேர்ந்திருந்தாலும் எக்காரணத்தைக் கொண்டும் மதம் மாற மாட்டோம் என்று கூறியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகும் விஜயலட்சுமி தொடர்ந்து படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.