இளம் நடிகர்களில் பாக்ஸ் ஆஃபிஸ் பாஸ் யார் தெரியுமா?


இளம் நடிகர்களில் பாக்ஸ் ஆஃபிஸ் பாஸ் யார் தெரியுமா?

நடிகர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா ஜோடியுடன், பிரபு, மனோபாலா, இமான் அண்ணாச்சி, மயில்சாமி மற்றும் பலர் நடித்து சமீபத்தில் வெளியான படம் காக்கி சட்டை.

இதுவரை காதல் பாதி, காமெடி பாதி என்றிருந்த சிவகார்த்திகேயன், இப்படத்தின் மூலமாக காதல் பாதி, ஆக்ஷன் மீதி என்று கலக்கியிருந்தார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து, முழுக்க ஆக்ஷனில் கலக்கி இருந்தார்.

இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் அன்று ரூ 4.80 கோடி வசூல் செய்திருந்தது. அதற்கு முன்பு வெளியான தனுஷின் ‘அனேகன்’, படம் முதல்நாள் அன்று தமிழகத்தில் ரூ 5.80 கோடி வசூல் செய்திருந்தது என்பதை நாங்கள் முன்பே தெரிவித்து இருந்தோம் அல்லவா?

இந்நிலையில், காக்கி சட்டை படம் கலவையான விமர்சங்களை சந்தித்து வந்தாலும், வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. தற்போது வரை இப்படம் உலகம் முழுவதும் ரூ 36 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது உள்ள வேறு எந்த இளம் நடிகர்கள் படமும் இந்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.