“திகிலில் திணறும் கோடம்பாக்கம்?? காரணம் ரஜினியாம்!!”


“திகிலில் திணறும் கோடம்பாக்கம்?? காரணம் ரஜினியாம்!!”

தமிழ் சினிமாவில் ரஜினியின் பலம் பற்றி நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. அவர் ஒரு விஷயத்தை தொடங்கி வைத்தால் அதே ரூட்டில் பலரும் போக காத்திருக்கின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்பு சந்திரமுகி படத்தை கொடுத்தார். திகில் கதையான இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியது.

அன்றுமுதல் பல நடிகர்களும் திகில் ரூட்டில் பயணிக்க ஆரம்பித்து விட்டனர். மாஸ் படத்தில் சூர்யா, காஞ்சனா படத்தில் லாரன்ஸ், டிமான்டி காலனி படத்தில் அருள்நிதி என பேய் வேஷம் தொடர்ந்து வருகிறது.

விரைவில் வெளியாகவிருக்கும் மிருதன் படத்தில் ஜெயம் ரவி, சவுகார்பேட்டை படத்தில் ஸ்ரீகாந்த், ஜாக்சன் துரை படத்தில் சத்யராஜ் என இந்த நடிகர்கள் பட்டியல் நீ….ண்டு கொண்டே போகிறது.

தற்போது பொட்டு படத்தின் மூலம் பரத்தும் இந்த திகில் ஹீரோ வரிசையில் இணைந்துள்ளார்.

ஹ்ம்… இன்னும் விஜய், அஜித்தான் வரல… அவர்களும் சீக்கிரமே வந்துடுவாங்க போல…