விஷாலுக்கு ‘திமிரு'; ஆனால் தருண்கோபிக்கு ‘வெறி’


விஷாலுக்கு ‘திமிரு'; ஆனால் தருண்கோபிக்கு ‘வெறி’

விஷால் நடித்த ‘திமிரு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தருண் கோபி. இப்படத்தில் ரீமாசென், ஸ்ரேயாரெட்டி, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். மதுரையை மையமாக கொண்ட இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து நிக் ஆர்ட்ஸ் சார்பில் எஸ். எஸ். சக்ரவர்த்தி தயாரிப்பில் சிம்பு, வேதிகா, நிலா நடித்த ‘காளை’ படத்தை இயக்கியிருந்தார் தருண்கோபி. அதன்பின்னர் படங்களை இயக்காமல் முழுநேர நடிகராக மாறி ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘பேச்சியக்கா மருமகன்’ போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் மீண்டும் இயக்குனர் அவதாரம் + அரிதாரம் பூசி நடிக்கவிருக்கிறார் தருண். ’திமிரு’ படத்தின் இரண்டாம் பாகமான ’வெறி’ என்ற படத்தை எழுதி இயக்கி தானே ஹீரோவாக நடிக்க போகிறாராம். படத்தை எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரிக்க இருக்கிறார்.