அடுத்த ஆக்ஷன் ரெடி… இணையத்தை கலக்கும் ‘விஜய் 60’..!


அடுத்த ஆக்ஷன் ரெடி… இணையத்தை கலக்கும் ‘விஜய் 60’..!

தெறி படம் பற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் 60ஆவது படம் பற்றிய தகவல்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பரதன் இயக்கவுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புக்கான தளங்களை பார்வையிடுவதற்காக இயக்குனர் பரதன், ஒளிப்பதிவாளர் சுகுமார், ஆர்ட் டைரக்டர் பிரபாகரன் ஆகியோர் ஹைதராபாத் சென்றுள்ளனர்.

அவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பிரவீன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.