ராதிகாவுக்கு நன்றி கூறிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சாய்பிரசாந்த்..!


ராதிகாவுக்கு நன்றி கூறிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சாய்பிரசாந்த்..!

இந்த வருடத்தின் 80 நாட்களை கடக்காத நிலையில் 8 மரணங்கள் மலையாள திரையுலகில் நடைபெற்றுள்ளது.

அதுபோல் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மரணங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், திரைப்பட கலைஞர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

நேற்று பிரபல டிவி நடிகர் சாய் பிரசாந்த் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். இவர், நேரம், தெகிடி மற்றும் வடகறி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு வயது 32.

தற்போது மதுரவாயல் காவல் நிலையத்தில் அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.

இவரது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும், மன உளச்சல் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் தன்னுடைய வளர்ச்சியில் பெரிதும் துணை நின்ற ‘அம்மா’ ராதிகா சரத்குமாருக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சாய் பிரசாந்துக்கு நிரஞ்சனா என்ற மனைவி இருக்கிறார்.