நட்சத்திர கிரிக்கெட்…மீண்டும் தோற்ற சென்னை ரைனோஸ்..!


நட்சத்திர கிரிக்கெட்…மீண்டும் தோற்ற சென்னை ரைனோஸ்..!

சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி (சிசிஎல்) நடைபெற்று வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் பங்கேற்றன. இந்த ஆட்டம் கொச்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி பேட்டிங் செய்ய, நடிகர்கள் அசோக் செல்வனும், விக்ராந்தும் களம் இறங்கினார்கள். அசோக் செல்வன் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து களம் இறங்கிய விஷ்ணு 16 ரன்களும், சாந்தனு 24 ரன்களும் எடுத்தனர்.

ஆனால் விக்ராந்த் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 64 பந்துக்களில் 100 ரன்கள் குவித்தார். மொத்தம் சென்னை அணி 20 ஓவரில் 164 ரன்களை எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் அதிரடி ஆட்டத்தை தொடங்கியது.

17.3 ஓவர்களில் 168 ரன்களை எடுத்து சென்னை அணியை வீழ்த்தியது. வாரியர்ஸ் அணி 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.