மிஷ்கினுடன் கைகோர்க்கும் ‘தாரை தப்பட்டை’ வில்லன்..!


மிஷ்கினுடன் கைகோர்க்கும் ‘தாரை தப்பட்டை’ வில்லன்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஒளிப்பதிவாளர் செழியன். ஷங்கர் தயாரித்த ‘கல்லூரி’ மற்றும் ‘ரெட்டைச்சுழி’ படங்களில் பணியாற்றினார்.

அதன்பின்னர் பாலா இயக்கி கடைசியாக வெளியான பரதேசி மற்றும் தாரை தப்பட்டை ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார். தற்போது இயக்குனராக அவதாரமெடுக்கிறாராம் செழியன்.

இதில் மிஷ்கின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தாரை தப்பட்டை படத்தில் மிரட்டிய வில்லன் ஆர். கே. சுரேஷும் நடிக்கிறார். இவர்கள் இருவரும் போலீஸ் கேரக்டரில் நடிக்கின்றனர்.

வருகிற மார்ச் மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்கவிருக்கின்றனர். இப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக ஆர். கே. சுரேஷ் அவர்களே தயாரிக்கக்கூடும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.