‘பேரு வைக்கல, பிரஸ் மீட் வைக்கிறாங்க’ அஜித் பட அப்டேட்ஸ்!


‘பேரு வைக்கல, பிரஸ் மீட் வைக்கிறாங்க’ அஜித் பட அப்டேட்ஸ்!

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு அஜித் தற்போது சிவா இயக்கும் ‘தல 56’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின், சூரி, தம்பி ராமையா, கபீர் துகான் சிங், ராகுல், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்க வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே படப்பிடிப்பு முடியும் முன்னரே இப்படத்திற்கான மொத்த வியாபாரமும் முடிந்து விட்டதாம். தீபாவளி வாரத்தில் படத்தை வெளியிட தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை விநாயகர் சதுர்த்தியன்று (செப்டம்பர் 17ஆம் தேதி) வெளியிடவுள்ளனர்.

தற்போது இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பை அடுத்த வாரம் நடத்தவுள்ளார்களாம். இதனையறிந்த சிலர் “இன்னும் படத்துக்கு பேரு வைக்கல… அதுக்குள்ள பிரஸ் மீட் வைக்கிறார்களே” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.