புதிய முயற்சி.. ஆனால் பழைய பாணிக்கே திரும்பும் அஜித்..!


புதிய முயற்சி.. ஆனால் பழைய பாணிக்கே திரும்பும் அஜித்..!

‘வேதாளம்’ படத்தை முடித்துவிட்டு விபத்து காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அஜித். தற்போது டாக்டர்களின் அட்வைஸ் படி ஓய்வில் இருக்கிறார்.

இருந்தபோதிலும் தன் அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தைகளையும் அவர் இடையே விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. சிவா இயக்கும் புதிய படத்தில் நடிப்பதை தொடர்ந்து மேலும் ஒரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அவை தற்போதுள்ள தமிழ் சினிமா முயற்சிக்காத ஒரு முறையை அவர் கையாளவுள்ளதாக தெரிகிறது. நீண்ட காலமாகவே சரித்திர கால கதையில் நடிக்க அஜித் விரும்பி வருவதாகவும் அதற்கான காலம் தற்போது கனிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன் இருவரும் தற்போது தென்னிந்தியாவில் உள்ள கோயில்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் இணையும் படத்தில் ராஜராஜ சோழன் கதையை படமாக்கவுள்ளதாகவும் அஜித் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் பழைய ப்ளாக் அண்ட் ஒயிட் கால பாணியில் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. நிஜமாக இது சாத்தியமானால் வித்தியாசமான முயற்சிதான்.

ஆனால் ‘தல’ ரசிகர்களின் சிந்தனை எப்படியிருக்குமோ?