தல-தளபதி ரசிகர்கள் மீண்டும் மோத வாய்ப்பு..!


தல-தளபதி ரசிகர்கள் மீண்டும் மோத வாய்ப்பு..!

பொதுவாகவே ஒரே நாளில் நிறைய படங்கள் வெளியானால் போட்டி பலமாக இருக்கும். அதிலும் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால், கேட்கவே வேண்டாம். ரசிகர்களுக்கு அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி போல தான்.

ஆனால் தற்போது வரவிருக்கும் இரண்டு படங்கள் அஜித், விஜய் நேரிடையாக நடித்த படம் இல்லையென்றாலும், அவர்கள் சம்பந்தபட்ட படங்கள் பலத்த எதிர்பார்ப்புடன் விரைவில் வெளியாகவுள்ளது.

“மூன்று ரசிகர்கள்” என்ற பெயரில் உருவாகும் ஒரு படம் விஜய் ரசிகர்களை பற்றிய படம். இதன் படப்பிடிப்பை கூட அண்மையில் நடிகர் விஜய் வீட்டிலேயே நடத்தி இருந்தார்கள்.

இந்நிலையில் ‘தல போல வருமா?’ என்ற அஜித் ரசிகர்கள் பற்றிய படம் ஒன்றும் உருவாகி வருகிறது.

இந்த இரு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தல-தளபதி ரசிகர்கள் மீண்டும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகி வருகிறது.