மோகன்லாலுடன் இணைந்த அஜித்.. ரசிகர்களின் அடுத்த கொண்டாட்டம்.!


மோகன்லாலுடன் இணைந்த அஜித்.. ரசிகர்களின் அடுத்த கொண்டாட்டம்.!

தமிழக சினிமா ரசிகர்களைப் போல் கேரளாவிலும் புதுப்புது யுக்திகளை ரசிகர்கள் கையாண்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் மோகன்லால் ரசிகர்கள் ‘ஸ்படிகம்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய சொல்லி தியேட்டர்களில் கொண்டாடினர்.

அதுபோல் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான மோகன்லாலின் ‘நரசிம்மம்’ படத்தையும் கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் ரீ-ரிலீஸ் செய்ய வைத்தனர்.

ஏழு மாவட்டங்களில் உள்ள முக்கிய திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

தற்போது இந்த வரிசையில் மோகன்லாலை தொடர்ந்து அஜித்தும் இணைந்துள்ளார்.

மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் ஒரு திரையரங்கில் தீனா படத்தின் ஸ்பெஷல் ஷோவை திரையிட கேட்டுக் கொண்டுள்ளனர்.

தியேட்டர் நிர்வாகமும் ஓகே சொல்ல, தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாம்.

இப்படத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, அஜித்தின் சகோதரனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.