ரஜினி, கமல், அஜித் படத் தயாரிப்பாளருடன் இணைந்த விஜய்… பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது..!


ரஜினி, கமல், அஜித் படத் தயாரிப்பாளருடன் இணைந்த விஜய்… பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது..!

அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து விஜய்-பரதன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 60″ என பெயரிட்டுள்ளனர்.

இன்று பூந்தமல்லி EVP ஸ்டூடியோவில் பூஜை போடப்பட்டதை தொடர்ந்து இதன் படப்பிடிப்பு இனிதே தொடங்கியுள்ளது.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமைய்யா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதவிருக்கிறார். பிரவின் கே.எல். எடிட்டிங் செய்கிறார்.

எம்ஜிஆரின் எங்கள் வீட்டு பிள்ளை, ரஜினியின் உழைப்பாளி, கமலின் நம்மவர், அஜித்தின் வீரம், தனுஷின் படிக்காதவன், வேங்கை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த விஜயா புரொடக்க்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இன்றும் நாளையும் மட்டுமே இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.