மீண்டும் மீண்டும் மோதிக் கொள்ளும் அஜித்-விஜய்-விக்ரம்..!


மீண்டும் மீண்டும் மோதிக் கொள்ளும் அஜித்-விஜய்-விக்ரம்..!

பரதன் இயக்கத்தில் தளபதி 60 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை அடுத்த வருடம் 2017ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம் விஜய். இதே நாளில் பொங்கல் தினத்தில் அஜித்தின் தல 57 படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பே பலமுறை அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி மோதி வருகின்றன.

ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்கள் கடந்த 2014 பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆனது.

இவர்களின் மோதலை தொடர்ந்து, திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள கருடா படமும் 2017 பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பே 2002ஆம் ஆண்டில் விஜய்யின் தமிழன் – விக்ரமின் ஜெமினி, 2005ஆம் ஆண்டில் சிவகாசி – மஜா ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.