வெங்கட்பிரபு – யுவன்சங்கர் பிரிவுக்கு சூர்யா காரணமா?


வெங்கட்பிரபு – யுவன்சங்கர் பிரிவுக்கு சூர்யா காரணமா?

சூர்யா, நயன்தாரா, ஜெயராம் மற்றும் பிரேம்ஜி நடித்து வரும் படம் ‘மாஸ்’. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

‘அஞ்சான்’ படம் தோல்விக்கு பிறகு அர்ஜெண்டா ஒரு வெற்றி கொடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளார் சூர்யா. இந்நிலையில் இவரின் ‘மாஸ்’ படம் முடியாமல் தள்ளிக்கொண்டே போனது. இதற்கு யுவனின் இசையும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் சற்று கோபமான சூர்யா வேறு ஒரு இசையமைப்பாளரை நியமிக்க முடிவு செய்திருந்தார்.

தற்போது ‘மாஸ்’ படத்தின் மீதமுள்ள பாடல் மற்றும் படத்தின் பின்னணி இசையை அமைக்க சொல்லி இசையமைப்பாளர் தமனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவரும் பாடலை முடித்துக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினையால், இதுவரை இணைபிரியாமல் இருந்து வந்த அண்ணன் -தம்பி இடையே லேசாக விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இந்தக் கூட்டணி தொடருமா? அல்லது உடையுமா? என்பதை காலம் கனியும் வரை காத்திருந்து பார்ப்போம்.

சூர்யா படத்திற்கு தமன் இசையமைப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.