இன்று மாலை டிரெய்லர், காத்திருக்கும் ‘தங்கமகன்’கள்!


இன்று மாலை டிரெய்லர், காத்திருக்கும் ‘தங்கமகன்’கள்!

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை தொடர்ந்து தனுஷ் மற்றும் வேல்ராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இவர்களுடன் ராதிகா, கே எஸ் ரவிக்குமார், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குமரன் ஒளிப்பதிவு செய்ய கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியனுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார் தனுஷ்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த நான்கு பாடல்களையும் தனுஷே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது.

இன்று (டிச. 10ஆம் தேதி) மாலை 6 மணியளவில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிடவிருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படம் தெலுங்கில் ‘நவ மன்மதுடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.