‘நயன்தாரா உதவவில்லை; விக்னேஷ் சிவன் சந்திக்கவில்லை’ – தனுஷ்!


‘நயன்தாரா உதவவில்லை; விக்னேஷ் சிவன் சந்திக்கவில்லை’ – தனுஷ்!

நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் வேல்ராஜ் கூட்டணி அமைத்துள்ள தங்கமகன் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தனுஷ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது…

இந்த ‘தங்க மகன்’ படம் ஒரு குடும்ப பாங்கான படம். ஒரு இளைஞனின் வாழ்கையானது திருமணத்துக்கு முன்பு எப்படி உள்ளது. திருமணத்திற்கு பின் எப்படி உள்ளது என்பதை காண்பித்துள்ளோம்.

பிரபுசாலமன் இயக்கத்தில் நான் நடித்துள்ள படத்திற்கு இன்னும் தலைப்பிட படவில்லை. விரைவில் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு வெளியிடப்படும். துரை. செந்தில்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒரு இந்திப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.

நானும் ரௌடிதான் படம் திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டிவிட்டது. இதுஒரு புறம் வருத்தம் என்றாலும் நான் யாரையும் கோபித்துக் கொள்ளவில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இயக்குனர் விக்னேஷ்சிவன் என்னை வந்து சந்திக்கவில்லை. அந்த படத்திற்கு நயன்தாரா பண உதவி எதுவும் செய்யவில்லை.”

இவ்வாறு கூறினார் தனுஷ்.