தனுஷின் ‘தங்க மகன்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்!


தனுஷின் ‘தங்க மகன்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்!

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இணைந்த தனுஷ்-வேல்ராஜ் கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள படம் ‘தங்க மகன்’. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்டனர் படக்குழுவினர்.

இதன் படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தன. முதலில் இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகலாம் என கூறப்பட்டது. பின்னர் அது இல்லை என்று முடிவானபின்னர் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு  டிசம்பர் 11ஆம் ரிலீஸ் ஆகலாம் எனவும் கூறப்பட்டது. இதற்கு காரணமாக ‘தங்க மகன்’ என்ற டைட்டில் ரஜினியின் படம் என்பதால் இப்படியும் ஒரு செய்தி வெளியானது.

ஆனால் தற்போது இப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷுடன் சமந்தா, எமிஜாக்சன், சதீஷ், ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.