‘நானும் ரெளடிதான்’ தங்கமே… சிங்கிள் ட்ராக் ரிலீஸ்!


‘நானும் ரெளடிதான்’ தங்கமே… சிங்கிள் ட்ராக் ரிலீஸ்!

விஜய்யின் புலி வெளியாகும் நாளில் ‘நானும் ரெளடிதான்‘ படமும் வெளியாகவுள்ளதால் இப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. எனவே படத்தை வெளியிடுவதற்காக பணிகளில் தயாரிப்பாளர் தனுஷ் மும்முரமாக உள்ளார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்ள்ளனர். நயன்தாராவின் காதலர் என கிசுசிசுக்கப்படும் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ‘தங்கமே…’ என்ற பாடல் நேற்று வெளியாகவிருந்தது. ஆனால் தற்போது வரும் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தன் சமூக வலைத்தளத்தில் அனிருத் உறுதி செய்துள்ளார். அனிருத்தின் முந்தைய பாடல்களை போல் இந்த பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என  படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.