அஜித், சூர்யா வழியில் வெற்றியை உறுதி செய்யும் ஜெயம் ரவி..!


அஜித், சூர்யா வழியில் வெற்றியை உறுதி செய்யும் ஜெயம் ரவி..!

கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கு மறக்க முடியாத ஆண்டாய் அமைந்தது. நான்கு அதிரடியான படங்களை கொடுத்தார்.

அதில் தனி ஒருவன் திரைப்படம் தமிழ் சினிமாவுக்கே திருப்புமுனையாய் அமைந்த படம் என்றால் அது மிகையல்ல.

மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளதாகவும், அது ஜெயம் ரவியின் 25வது படமாக இருக்கும்” எனவும் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தன் 25வது படத்தின் வெற்றியை தற்போதே ஜெயம் ரவி உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்திற்கு அமர்களம், சூர்யாவுக்கு சிங்கம் ஆகிய படங்கள் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தன. பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் 25வது படம் வெற்றியாய் அமையவில்லை என்பது இங்கே கவனித்தக்கது.