‘தனி ஒருவன்’ வெற்றிச் சந்திப்பில் அழுத ஜெயம் ரவி, ராஜா!


‘தனி ஒருவன்’ வெற்றிச் சந்திப்பில் அழுத ஜெயம் ரவி, ராஜா!

இந்த வருடம் மட்டும் ஜெயம் ரவி நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘அப்பாடக்கர்’ படங்களில் கடந்த சில மாதங்களில் வெளியானது. இரண்டிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருந்தார்.

சமீபத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளார். இப்படம் இவருக்கும் இவரது அண்ணன் மோகன் ராஜாவுக்கும் இவர்களது கேரியரில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கியுள்ளது. இதனால் சகோதரர்கள் இருவரும் தங்களது வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். இதில் இயக்குனர் மோகன் ராஜா பேசியதாவது…. ‘நான் ரீமேக் படங்களை இயக்குவதால் அனைவரும் என்னை ரீமேக் ராஜா என்றே அழைத்தனர். என் இயக்கத்தில் நடிக்க வரும் நடிகர்களும் என் கதையில் நம்பிக்கை இல்லாமல் ரீமேக் படங்கள் என்றால் நடிக்கிறேன் என்பார்கள். ஆனால் இன்று என் சொந்த படைப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளேன். அவர்கள் எனக்கு மாபெரும் வெற்றியை அளித்துள்ளார்கள்” என்றார்.

இதை கூறிக்கொண்டே இருக்கும்போது ராஜா கண்ணீர் விட்டார். அண்ணன் அழுததை பார்த்த ஜெயம் ரவி உணர்ச்சிவசப்பட்டு அவரும் கண்ணீர் விட்டு அழுதார். இந்த சகோதரர்களின் பாசத்தைப் பார்த்த அனைவரும் அமைதியாக நின்றனர்.


எக்ஸ்ட்ரா டிப்ஸ்: இனி மூன்று படத்திற்கு ஒரு முறை என் அண்ணன் இயக்கத்தில் நடிப்பேன் என ஜெயம் ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.