ஹிப் ஹாப் தமிழா… இனி ஹிப் ஹாப் தெலுங்கா…?


ஹிப் ஹாப் தமிழா… இனி ஹிப் ஹாப் தெலுங்கா…?

ரசிகர்களின் ஆதரவோடு இன்றைய தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகின்றனர் இளம் இசையமைப்பாளர்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

கடந்தாண்டு இவரது இசையில் வெளியான தனி ஒருவன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இவரது பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் அமைந்தது.

இந்நிலையில் தற்போது ‘தனி ஒருவன்’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மோகன் ராஜா திரைக்கதை எழுத, சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். நாயகனாக ராம்சரண் நடிக்கிறார். இவருடன் ஸ்ருதிஹாசன், அரவிந்த்சாமி, ஷாம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.

அப்போ.. இனி ஹிப் ஹாப் தெலுங்கர் சொல்லுங்க…