ஹனிமூன் செல்ல மறுத்த நடிகை ஷிவதா நாயர்!


ஹனிமூன் செல்ல மறுத்த நடிகை ஷிவதா நாயர்!

மலையாள சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஷிவதா பாசில் இயக்கிய ‘லிவிங் டுகெதர்’ படத்தில் ஸ்ரீலேகா என்ற பெயரில் அறிமுகமானார்.

பின்னர் ‘நெடுஞ்சாலை’ படத்திற்காக தன் பெயரை ஷிவதா நாயர் என மாற்றிக்கொண்டு ஆரியுடன் நடித்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் ‘தர்மதுரை’, பாபி சிம்ஹாவுடன் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்துள்ள ‘ஜீரோ’, ‘கட்டம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதனிடையில் கடந்த டிச. 14ஆம் தேதி மலையாள நடிகர் முரளி கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன இரண்டே நாட்களில் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.

ஹனிமூன் கூட செல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வது ஏன்? என்றதற்கு… “நான் தற்போது கமிட் ஆகியுள்ள படங்களில் பிஸியாக இருக்கிறேன். ஹனிமூன் செல்ல நேரம் இல்லை. எனவே மறுத்து விட்டேன். மேலும் தற்போது பரத நாட்டியத்தில் மேற்படிப்பு படித்து வருகிறேன்” என்றார்.