படமே ஸ்டார்ட் ஆகல… அதற்குள் கமல் படத்திற்கு வந்த எதிர்ப்பு…!


படமே ஸ்டார்ட் ஆகல… அதற்குள் கமல் படத்திற்கு வந்த எதிர்ப்பு…!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் நடிக்கவுள்ள சபாஷ் நாயுடு படத்தின் துவக்கவிழாவை நடிகர் சங்க மைதானத்தில் நடத்தினார் கமல்ஹாசன்.

அப்போதே இப்படத்திற்கு ஜாதிப்பெயர் வைத்திருப்பது நியாயமா? என பத்திரிகை நண்பர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல்…..

“ஒரு குடிகாரனைப் பத்தி சொன்னாதான், மதுவிலக்கு பற்றி கூறமுடியும். அதுபோல தான் இப்படத்திலும் உள்ளது” என்றார்.

மேலும் தெருக்களின் பெயர்களில் இருக்கும் ஜாதிப் பெயரையும் எடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டு இருக்கும் குன்னம் தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் என்பவர் தன் பேஸ்புக் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“ஹரியானாவில் உள்ளது போல தமிழகத்திலும் சாதிவெறி தலை விரித்தாடுகிறது.

எனவே, சாதியின் பெயரை ஒரு படத்தின் தலைப்பாக வைத்தால், அது தமிழகத்தின் அமைதியான சூழலை சீரழிக்கும்.

எனவே இப்படியான விபரீத முயற்சியில் ஈடுபடவேண்டாம்” என கமல்ஹாசனை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சாதிப் பெருமிதத்தை சொல்லும் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்” என்று ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.