ரசிகர்கள் மோதி பார்த்திருப்பீங்க. விஜய்-அஜித் ரசிகைகள் மோதி பார்த்ததுண்டா?


ரசிகர்கள் மோதி பார்த்திருப்பீங்க. விஜய்-அஜித் ரசிகைகள் மோதி பார்த்ததுண்டா?

இயக்குனர் சாமி என்று சொல்வதை விட சர்ச்சை சாமி என்று சொன்னால் சட்டென புரியும்தானே உங்களுக்கு. இவர் ‘சிந்து சமவெளி’, ‘மிருகம்’, ‘உயிர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர் தற்போது இயக்கிவரும் படம்  ‘கங்காரு’. இப்படத்தில் அர்ஜூனா கதாநாயகனாக நடிக்க அவரின் தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். மேலும் அவரின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார்.

படத்தில் நாயகனின் தங்கையாக வரும் பிரியங்கா அஜித் ரசிகையாகவும், அவரின் காதலியாக வரும் வர்ஷா விஜய் ரசிகையாகவும் வருகிறார்களாம். பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா விஜய்யின் புகழ் பாடுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். இறுதியில் படத்தில் தல ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும் காட்சிகளை வைத்துள்ளாராம் இயக்குனர்.

தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு ராஜரத்னம் செய்துள்ளார். அடுத்த மாதம் ஏப்ரல் 10-ந் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இப்படத்தை சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்துள்ளார்.