விஷாலுடன் இணைந்த பாபி…. சிம்புவுடன் இணைந்த விஜய் சேதுபதி..!


விஷாலுடன் இணைந்த பாபி…. சிம்புவுடன் இணைந்த விஜய் சேதுபதி..!

அனல் பறக்கும் வெயிலின் நடுவே அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.

எனவே, அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘கோ 2’ படத்தை தேர்தலுக்கு முன்னரே வெளியிடுகின்றனர். அதாவது மே 13ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதே நாளில் நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த, சுந்தர் சி இயக்கிய ‘மதகஜராஜா’ படமும் வெளியாகும் என விஷால் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இதற்கு அடுத்த வாரம் அதாவது தேர்தல் முடிவுக்கு மறுநாள், மே 20ஆம் இரண்டு முக்கிய படங்கள் வெளியாகவுள்ளது.

ஒன்று… பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படம்.

மற்றொன்று…. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவ்ரியா, கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள ‘இறைவி’.