‘இழப்பு விக்ரமுக்கு இல்லை… தேசிய விருதுக்குதான்’ – பி.சி.ஸ்ரீராம்


‘இழப்பு விக்ரமுக்கு இல்லை… தேசிய விருதுக்குதான்’ – பி.சி.ஸ்ரீராம்

அந்நியன் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு பிறகு ஐ படத்திற்காக ஷங்கர், விக்ரம் இணைந்தனர்.

இப்படத்திற்காக உயிரை பணயம் வைத்து விக்ரம் எடுத்துக் கொண்ட ரிஸ்க்குகள் இந்திய சினிமா வரலாற்றில் பெருமையாக பேசப்பட்டது.

எனவே விக்ரம் தேசிய விருதை வெல்வார் என திரையுலக வல்லுனர்கள் முதல் கடைக்கோடி ரசிகர்கள் வரை கூறி வந்தனர்.

ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் விக்ரம் பெயர் இடம் பெறவில்லை.

எனவே ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதில்…

“ ஒரு படத்திற்காக தன்னை அர்ப்பணித்த விக்ரமிற்கு விருது இல்லாமல் போனதிற்கு வருந்துகிறேன். தேசியவிருதுகள் அதன் மதிப்பை பல நேரங்களில் இழந்து விடுகிறது. விக்ரம் எதையும் இழந்துவிடவில்லை” என்று தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.