மணிரத்னம்-கார்த்தி கூட்டணியில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்…!


மணிரத்னம்-கார்த்தி கூட்டணியில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்…!

தோழா படத்தின் வெற்றியில் திளைத்திருக்கும் கார்த்தி, தற்போது காஷ்மோரா படத்தில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படத்திற்காக மொட்டை தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இவருடன் நயன்தாரா, விவேக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி. இவரின் ஜோடியாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், இக்கூட்டணியில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இணைந்துள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இத்தகவலை சற்றுமுன் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளனர்.