விஜய்யால் விஜய்சேதுபதி படத்திற்கு வந்த ஆபத்து..?


விஜய்யால் விஜய்சேதுபதி படத்திற்கு வந்த ஆபத்து..?

என்னதான் காதலர் தினத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆனாலும், காதலை போற்றும்படியாக படங்கள் வந்தால்தானே காதலர்களுக்கு மகிழ்ச்சி. அப்படியொரு படமாக விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ வெளியாகும் என காதலுடன்.. ஸாரி… ஆவலுடன் காத்திருந்தனர் காதலர்கள்.

ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை சில காரணங்களால் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைத்துவிட்டனர். இதற்கு பதிலாக விஜய் சேதுபதியின் மற்றொரு படமான சேதுபதி படத்தை பிப்ரவரியில் வெளியிடுகின்றனர்.

மேலும் இதற்கு பின்னணயில் சில விஷயங்கள் நடந்தேறியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ‘தெறி’ படத்தின் கதையும் ‘சேதுபதி’ படத்தின் கதையும் கிட்டதட்ட ஒரே மாதிரியான கதைக்களமாம். அதாவது இரண்டும் போலீஸ் கேரக்டர் என்றாலும் குழந்தை மற்றும் குடும்ப செண்டிமென்ட் அம்சங்களை கொண்டுள்ளது.

ஒருவேளை ‘சேதுபதி’ படம் ஏதாவது காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, தேர்தல் பிரச்சினைகளால் ‘தெறி’ முன்பே ரிலீஸானால் ‘சேதுபதி’ படத்தின் வசூல் பாதிக்கப்படக்கூடும்.

எனவே ‘கா க போ’ படத்தை காட்டிலும் ‘சேதுபதி’ படத்திற்கே தற்போது முன்னுரிமை வேண்டும் என்ற காரணத்தில் இப்படியான அதிரடி முடிவை சம்பந்தப்பட்ட படத்தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

‘சேதுபதி’ படத்தை வெளியிடும் உரிமையை விஜய்சேதுபதியின் நண்பரின் நிறுவனமான ஆரஞ்சு பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.