‘பாகுபலி’யை ‘தெறி’க்க விட்ட இளைய தளபதி..!


‘பாகுபலி’யை ‘தெறி’க்க விட்ட இளைய தளபதி..!

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி வெளியானது. இது சென்னை பாக்ஸ் ஆபிஸில் கத்தி, புலி மற்றும் பாகுபலி ஆகிய படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

இப்படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ 1 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது.

தற்போது படம் வெளியாகி 4 நாட்களில் 456 காட்சிகள் திரையிடப்பட்டது. இந்த நாட்களில் ரூ 3.06 கோடி வசூல் செய்துள்ளது.

கத்தி படம் 411 காட்சிகளில் ரூ 3.01 கோடி வசூலும், புலி படம் 465 காட்சிகளில் ரூ. 2.84 கோடி வசூலும் செய்திருந்தது.

மேலும் பாகுபலி படம் வாரமுடிவில் சென்னையில் ரூ. 1.66 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள பல முக்கியமான திரையரங்குகளில் தெறி படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதும் இங்கே கவனித்தக்கது.