‘தெறி’ நிஜ வசூல் எவ்வளவு..? தாணுவே சொன்ன தகவல்..!


‘தெறி’ நிஜ வசூல் எவ்வளவு..? தாணுவே சொன்ன தகவல்..!

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தெறி படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு ஏரியாவில் இப்படம் வெளியாகவில்லை என்றாலும் தமிழகத்தில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் சாதனைகளை இப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவே தன்னுடைய சமீபத்திய பேட்டியில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியது…

 • இப்படம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் மிகப்பெரிய வசூல் சரித்திரம் படைத்து வருகிறது.
 • இம்முறை நிறைய புது விநியோகஸ்தர்களிடம் படத்தை விற்றுள்ளேன். படத்தின் விளம்பரங்களில் கூட எந்த வித மறைவும் இல்லாமல், வசூல் தொகையை வெளியிட்டு வருகிறேன்.
 • இரண்டு நாட்களில் Gulf Countries மட்டும் ரூ. 4.75 கோடி வசூலித்துள்ளது.
 • அமெரிக்காவில் மட்டும் 3 நாட்களில் ரூ. 6.70 கோடி வசூலித்துள்ளது. சினி கேலக்ஸி இதன் உரிமையை ரூ. 3 கோடிக்கு மட்டுமே பெற்றது.
 • சென்னை சிட்டியில் மட்டும் ரூ. 1 கோடியே 6 லட்சம் வசூலித்து ரிக்கார்ட் செய்துள்ளது.
 • சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் 10 நாட்களில் ரூ. 10 கோடியை வசூலிக்கும் என கூறப்படுகிறது.
 • எனது முந்தைய படமான துப்பாக்கி வசூலை முறியடித்துள்ளது.
 • இதைவிட தெலுங்கில், சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. இதுவரை தெலுங்கில் விஜய் படங்கள் இப்படி சாதித்தது இல்லை.
 • வட அமெரிக்காவில் மட்டும் வசூலில் 1 மில்லியன் டாலரை தொடவுள்ளது.
 • இதுவரை எந்தவொரு படமும் எந்திரன் பட சாதனைகளை முறியடிக்க முடியவில்லை. ஆனால் யுகே பாக்ஸ் ஆபிஸில் தெறி அந்த சாதனைகளை முறியடித்துள்ளது.
 • தமிழ்நாட்டில் மட்டும் நான்கு நாட்களில்… ரூ. 35.05 கோடி வசூலித்துள்ளது. (செங்கல்பட்டு ஏரியாவில் 60 தியேட்டர்களில் திரையிடப்படவில்லை)