‘தெறி’ வசூல் எவ்வளவு..? ஏரியா வாரியாக முழு விவரம்..!


‘தெறி’ வசூல் எவ்வளவு..? ஏரியா வாரியாக முழு விவரம்..!

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் விஜய்யின் ‘தெறி’ வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆன இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.

முதல் நாள் மட்டும் தமிழகத்தில் ரூ. 13 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

ஆனால், செங்கல்பட்டு ஏரியாவில் விநியோக பிரச்சினையால் அங்கு வெளியாகவில்லை. இல்லையென்றால் இன்னும் வசூலை தமிழகத்திலும் குவித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 6.5 கோடி) வசூலை குவித்துள்ளது. இது ரஜினி, கமல் படங்களுக்கு நிகராக வசூல் என கூறப்படுகிறது.

கேரளாவில் முதல் நாளில் மட்டும் ரூ. 3 கோடியைத் தாண்டியுள்ளது. கர்நாடகாவில் ரூ. 2.25 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.