அஜித்தை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்…!


அஜித்தை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்…!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி-கமல், விஜய்-அஜித் படங்களுக்கு எப்போதும் ஒரு போட்டி இருக்கும்.

கமல் பெரும்பாலும் வித்தியாசமான படங்களையே கொடுத்து வருவதால் அவரது படங்கள் வேறு கோணத்தில் அலசி ஆராயப்படுகிறது.

ஆனால் ரஜினி, அஜித், விஜய் ஆகிய மூவரும் கமர்ஷியல் படங்களையே கொடுப்பதால், இவர்களின் படங்களின் வசூல் ஒப்பீடு எப்போதும் தொடர்கிறது.

இந்நிலையில், விஜய்யின் தெறி நேற்று வெளியானது. திரைக்கதையில் புதுமை இல்லையென்றாலும், படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான அஜித்தின் வேதாளம் பட வசூலை முறியடித்துள்ளதாக நெல்லை ராம் சினிமாஸ் தியேட்டர் நிர்வாகம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

அதுபோல் அமெரிக்காவில் தெறி, ப்ரீமியர் ஷோவில் மட்டும் 170K டாலர் வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங்கில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளராம் விஜய்.