நூறு கோடி வசூலித்த ‘தெறி’…. விண்ணை முட்டும் விநியோகம்…!


நூறு கோடி வசூலித்த ‘தெறி’…. விண்ணை முட்டும் விநியோகம்…!

விஜய், அட்லி, ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தெறி’ வருகிற ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

எனவே, இப்படத்தின் விநியோகம் படுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவு படம் வெளியீட்டிற்கு முன்பே லாபம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

‘தெறி’ படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 70 கோடிதான். ஆனால் இதன் வியாபாரம் தற்போது வரை ரூ. 100 கோடியை எட்டியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளவர்களின் பட்டியல் இதோ…

 • வட அமெரிக்கா : சினிகேலக்ஸி
 •  ஜப்பான் : செல்லுலாய்டு ஜப்பான்
 • மலேசியா : மாலிக் ஸ்ட்ரீம்ஸ்
 •  சிங்கப்பூர், சவுதி அரேபியா : சஞ்சய் வத்வா
 •  ஐரோப்பா, லண்டன், ஸ்ரீலங்கா : ஐங்கரன் இன்டர்நேஷனல்
 •  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து : எம்கேஎஸ் ரீடைல்ஸ்

தமிழக மாவட்டங்கள்…

 • சென்னை மற்றும் செங்கல்பட்டு : சத்யம் சினிமாஸ்
 • மதுரை, ராமநாதபுரம் : டைரக்டர் அமீர் (இம்பாலா தியேட்டர்ஸ்)
 • கோயம்புத்தூர் : மோனிகா ஃபிலிம்ஸ்
 • திருச்சி, தஞ்சாவூர் : பிகே நாராயணசாமி
 • சேலம் : 7ஜி சிவா
 • திருநெல்வேலி, கன்னியாகுமரி : மன்னன் பிலிம்ஸ்
 • வடஆற்காடு : அலங்கார் தியேட்டர் தேவராஜ்
 • தென்ஆற்காடு : டாக்டர் ஆல்பர்ட்

மற்ற மாநிலங்கள்…

 • கேரளா : கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ்
 • ஆந்திரா மற்றும் தெலுங்கானா : தில் ராஜு
 • கர்நாடகா : சௌத் சைட் ஸ்டுடியோஸ்