ரஜினி-கமல்-விக்ரம் படங்களுக்கு பிறகு விஜய் சாதனை..!


ரஜினி-கமல்-விக்ரம் படங்களுக்கு பிறகு விஜய் சாதனை..!

தொடர்ந்து அதிரடி ஹிட்டுக்களை கொடுத்து வந்த விஜய், கடந்த வருடம் வெளியான புலி படத்தால் சற்று துவண்டு போனார். எனவே, அட்லி படத்தை தெறிக்க விட முடிவு செய்தார்.

அவர் நினைத்ததை விட அதிகமாகவே இப்படம் திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் நன்றாகவே கல்லா கட்டி வருகிறது.

படம் வெளியாகி 6 நாட்களில் உலகமெங்கும் ரூ. 100 கோடியை வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதை தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ் படங்கள் அதிக வசூலை கொடுக்கும்.

ஆனால், சமீபகாலமாக அமெரிக்காவில் தமிழ் படங்கள் சாதனை புரிந்து வருகிறது.

ரஜினியின் எந்திரன், லிங்கா, கமலின் விஸ்வரூபம், விக்ரமின் ஐ ஆகிய படங்கள் மட்டுமே அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலை குவித்தன.

தற்போது ‘தெறி’ படமும் இந்த மில்லியனை எட்டியுள்ளது. இதை படத்தை அங்கு வெளியிட்ட சினி கேலக்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.