மல்ட்டிபிளக்ஸ் தியேட்டரை ‘தெறி’க்கவிட்ட விஜய்.. அடுத்த சாதனை..!


மல்ட்டிபிளக்ஸ் தியேட்டரை ‘தெறி’க்கவிட்ட விஜய்.. அடுத்த சாதனை..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.

ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இப்படம் 40 நாட்களை கடந்தும் இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சென்னையில் மட்டுமே இப்படம் ரூ.11 கோடி வசூலை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

மேலும் சென்னையில் உள்ள எஸ்பிஐ சினிமாஸ் வளாகத்தில் இதுநாள் வரை கிட்டதட்ட 1402 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளதாம்.

எந்த ஒரு தமிழ்ப் படத்திற்கும் இத்தனை காட்சிகள் இந்த திரையரங்கத்தில் இடம்பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.