‘லிங்கா’ மற்றும் ‘ஐ’ சாதனைகளை முறியடித்ததா ‘தெறி’…?


‘லிங்கா’ மற்றும் ‘ஐ’ சாதனைகளை முறியடித்ததா ‘தெறி’…?

ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் விஜய் நடித்துள்ள தெறி மிகப்பிரம்மாண்டமாக வெளியாகிறது.

எனவே நேற்று இதன் ரிசர்வேசன் தொடங்கியது. ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களிலேயே முதல் நாளுக்குரிய டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனையாகி விட்டதாம்.

எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான திரையரங்குகள் தமிழகம் முழுவதும் உள்ளது.

சென்னை மற்றும் கோவையில் உள்ள இந்த நிறுவனத்தின் தியேட்டர்களில் முதல் நாளுக்குரிய 120 காட்சிகளின் டிக்கெட்டுக்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்பனையாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன், இந்த திரையரங்குகளில் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தின் முதல் நாளில் 102 காட்சிகளுக்குரிய டிக்கெட்டுக்கள் விற்பனை ஆனது.

அதுபோல் LUXE தியேட்டர்களில் விக்ரம் நடித்த ‘ஐ’ படத்திற்கான 28 காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கள் விற்பனையாகி இருந்தன.

தற்போது இதே திரையரங்குகளில், தெறி படத்திற்கான 32 காட்சிகளுக்குரிய டிக்கெட்டுக்கள் விற்பனை ஆகிவிட்டதாம்.

தெறி வரும் முன்பே தெறிக்க விடுகிறதே. ரிலீஸ் ஆகிவிட்டால்….