‘தெறி’க்காக ஐநாக்ஸ் தியேட்டரை உடைத்த ‘வெறி’த்தனமான ரசிகர்கள்..!


‘தெறி’க்காக ஐநாக்ஸ் தியேட்டரை உடைத்த ‘வெறி’த்தனமான ரசிகர்கள்..!

விஜய் நடித்துள்ள தெறி நாளை மிகப்பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியாகிறது.

எனவே இதற்கான முன்பதிவு ஓரிரு நாட்களாக நடைபெற்று வருகிறது. பலர் ஆன்லைனில் டிக்கெட்டுக்களை ரிசர்வேசன் செய்தாலும், சிலர் கவுண்டரில் நின்று டிக்கெட்டுக்களை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் நேஷ்னல் தியேட்டரில் இன்று மதியம் 1 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் கட்டுக்கடங்காத அளவில் ரசிகர்கள் அங்கு குவிந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முன்பதிவு தொடங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய்யின் வெறித்தனமாக ரசிகர்கள் ரகளையில் இறங்கியுள்ளனர். அங்கிருந்த ஷட்டரை அடித்து உடைத்துள்ளனர்.

அந்த மல்டிப்ளக்ஸில் நிறைய நிறுவனங்கள் இருப்பதால், தற்போது முழுவதும் மூடப்பட்டுள்ளது.

சம்பவம் அறிந்த போலீசார் அங்கு வந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.