‘தெறி’க்கு பலத்த போட்டி…. உரிமையை கைப்பற்றிய பிருத்விராஜ்..!


‘தெறி’க்கு பலத்த போட்டி…. உரிமையை கைப்பற்றிய பிருத்விராஜ்..!

விஜய் நடித்துள்ள தெறி படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இதனால் தென்னிந்திய சினிமாவில் தெறி பீவர் தொற்றிக் கொண்டது எனலாம்.

தமிழகம், கனடா மற்றும் அமெரிக்காவில் இதன் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

மேலும் தமிழகத்தை போன்ற கேரளாவிலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் இப்படத்திற்கு பலத்த போட்டி நிலவியது.

இந்நிலையில் கேரள உரிமையை பிரபல ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறதாம்.

இது மலையாள நடிகர் பிருத்விராஜுவுக்கு சொந்தமானது.

அண்மையில் வெளியான பாவாட படத்தில் விஜய் ரசிகராக பிருத்விராஜ் நடித்திருந்தார் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.