‘தளபதி’ விஜய்யுடன் இணைந்த ரஜினியின் ‘தளபதி’..!


‘தளபதி’ விஜய்யுடன் இணைந்த ரஜினியின் ‘தளபதி’..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் டீசர் படைத்த சாதனையே அதற்கு மிகச் சிறந்த உதாரணம் எனலாம்.

இப்படத்தின் பாடல்கள் மிகப்பிரம்மாண்டமான முறையில் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் தேவா, விஜய், டி. ராஜேந்தர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாடியுள்ளனர்.

இதில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் ஒரு குத்து பாடல் என தெரிய வந்துள்ளது. சோனு கர்கார் என்ற பிரபல பாடகியும் இவருடன் இணைந்து பாடியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடல் ‘ராக்கம்மா’ என்ற வார்த்தையுடன் தொடங்குகிறதாம்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத் தட்டு என்ற பாடலும் இதே வரிகளுடன் தொடங்கியது.

இளையராஜா இசையமைத்த அப்பாடல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடல் என்பது நாம் அறிந்ததே.