அமெரிக்காவையும் ‘தெறி’க்க விட விஜய் திட்டம்..!


அமெரிக்காவையும் ‘தெறி’க்க விட விஜய் திட்டம்..!

தெறி வெளியாகும் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இது தமிழகத்தில் மட்டுமில்லாமல், கேரளா மற்றும் ஆந்திராவிலும் அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியாவைத் தாண்டி, இலங்கை, மலேசியா, லண்டன் மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் பலத்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறதாம்.

அமெரிக்காவில் ரஜினியின் கபாலிக்கு அடுத்தபடியாக தெறி நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. கபாலி ரூ. 8.5 கோடிக்கும், தெறி ரூ. 3 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் 140 திரையரங்குகளில் தெறியை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை விஜய் படங்கள் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.