அஜித்தின் வேதாளத்தை குறிவைக்கிறதா விஜய்யின் ‘தெறி’?


அஜித்தின் வேதாளத்தை குறிவைக்கிறதா விஜய்யின் ‘தெறி’?

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி விஜய் நடித்த ‘புலி’ படம் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக அஜித்தின் ‘வேதாளம்’ பர்ஸ்ட் லுக் வெளியானது.

விஜய்யின் ‘புலி’ படத்தில் வில்லன் கோஷ்டியின் பெயர் ‘வேதாளம்’ என வைக்கப்பட்டிருந்தது. இதனால் ‘புலி’ படம் வெளியான திரையரங்குகளில் அஜித் ரசிகர்களின் ஆரவாரமும் அதிகப்படியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘விஜய் 59’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு எவரும் எதிர்பாராத வகையில் ‘தெறி’ என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்களில் விஜய் மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றியிருக்கிறார்.

‘புலி’ படத்தில் இருந்து வேதாளத்தை அஜித் எடுத்துக் கொண்டார். தற்போது ‘வேதாளம்’ படத்திலிருந்து ‘தெறி’யை விஜய் எடுத்துள்ளார்.

இனி… ‘தெரி’யவரும் யார் நிஜமான ‘தெறி’ என்று…