சாந்தனு நடிக்க ஓகே சொல்லியும் நோ சொன்னாரா விஜய்..?


சாந்தனு நடிக்க ஓகே சொல்லியும் நோ சொன்னாரா விஜய்..?

பரதன் இயக்கத்தில் விஜய் 60 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், ஸ்ரீமன், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், சரத் லோகித்ஸ்வா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சாந்தனுவை அனுகியதாகவும், விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் அவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால், நீங்களும் ஒரு ஹீரோதான். என் படம் என்பதற்காக ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று விஜய் கூறியதால் சாந்தனு நடிக்கவில்லை என தகவல்கள் வந்தன.

இதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் சாந்தனு கூறியுள்ளதாவது…

“எப்படியெல்லாம் தொடர்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த நிகழ்ச்சி நடந்தது உண்மைதான். ஆனால் விஜய் படத்திற்காக அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

அப்படின்னா…? அது யாரு படமாக இருக்கும்..?