இரு அணி கூட்டத்திலும் பாக்யராஜ் பங்கேற்க இதுதான் காரணமா?


இரு அணி கூட்டத்திலும் பாக்யராஜ் பங்கேற்க இதுதான் காரணமா?

சட்டமன்ற தேர்தலை மிஞ்சிவிடும் அளவில் வளர்ந்து வருகிறது நடிகர் சங்கத் தேர்தல். நேற்று சரத்குமார் அணி சார்பாக ராதிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சிம்பு, ஊர்வசி, மோகன்ராமன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதுபோல சில நாட்களுக்கு முன் விஷால் அணியினர் நடத்திய கூட்டத்திலும் பாக்யராஜ் கலந்துகொண்டார்.

இந்த இரு அணி கூட்டத்திலும் பாக்யராஜ் கலந்து கொண்டது ஏன்? யாருக்குதான் அவருடைய ஆதரவு என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பாக்யராஜ் நேற்று பேசினார். அவர் பேசியதாவது…

“விஷால் அணி கூட்டத்திற்கு சென்றது என் மகன் சாந்தனுக்காகத்தான். சில நேரம் மனைவியை வைத்துத்தான் அவனிடம் பேச வேண்டியுள்ளது. நடிகர் சங்க மோதலால் என் குடும்பத்திலும் பிரச்சினை வெடித்துள்ளது. இரு தரப்பிலும் சமாதானம் பேசவே சென்றேன். ஆனால் அதற்கான சூழ்நிலை அங்கு அமையவில்லை.

இப்போது இந்த அணி கூட்டதிற்கு வந்தது இதை பற்றி சொல்வதற்காகத்தான். இரு அணிகள் இருக்கலாம். ஆனால் பிளவு ஏற்படக்கூடாது. ஒரு அணியை சேர்ந்த நடிகர்கள் படங்களில் அந்த அணி நடிகர்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகிட கூடாது என்பதே என் வேண்டுகோள்” என்றார்.